உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குன்னுார் ஐயப்பன் கோவிலில் 43வது தேர் பவனி

குன்னுார் ஐயப்பன் கோவிலில் 43வது தேர் பவனி

குன்னுார்: குன்னுார் அருகே அருவங்காடு ஐயப்பன் கோவிலில், 43வது ஆண்டு விழாவில், தேர் பவனி நடந்தது.

குன்னுார் அருகே அருவங்காடு ஐயப்பன் கோவிலில், 43வது ஆண்டு விழா கடந்த, 24ல் கணபதி ஹோமத்துடன் துவங்கியது. லலிதா சகஸ்ரநாம அர்ச்சனை, பகவதி சேவை, பிரசாத வினியோகம் ஆகியவை நடந்தன. இதை தொடர்ந்து, ஜெகதளா ஹெத்தையம்மன் கோவில் வளாகத்தில் இருந்து செண்டை மேள வாத்தியங்கள் முழங்க, தாலப்பொலி ஊர்வலம் நடந்தது. ஜெகதளா, அருவங்காடு, கோபாலபுரம், வழியாக மஞ்சிதளா சென்றடைந்த ஊர்வலம் முடிவில், சிறப்பு அலங்காரத்துடன் புலி வாகனத்தில் ஐயப்பன் பவனி வந்தார். இரவு, 9:00 மணிக்கு கோவிலை அடைந்து ஊர்வலம் நிறைவு பெற்றது. அங்கு மகா தீபாராதனை, மங்களம் வாழ்த்துடன் விழா நிறைவு பெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக நிரந்தர தலைவர் நீலகண்டன், தலைவர் கிருஷ்ணன், செயலாளர் சுரேஷ்பாபு, செயலாளர் ரதீஷ் உட்பட பக்தர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !