வீரபக்த ஆஞ்சநேயர் கோவிலில் மாணவர்களுக்காக யாகம்
                              ADDED :3532 days ago 
                            
                          
                          பேரையூர்: பேரையூர் அருகே கொட்டாணிபட்டியில் வீரபக்த ஆஞ்சநேயர் கோவிலில் 10 ஆம் வகுப்பு பிளஸ் 2 மற்றும் அரசுத்தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களுக்காக சிறப்பு ஹயக்கிரீவர் யாகம் நடந்தது. தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற சுமார் 2,500 பேனாக்கள் யாகத்தில் வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டன. மாலை கோமாதா பூஜை செய்யப்பட்டது, ஜோதிடர் சீ.அறிவழகன் மற்றும் மு.சுப்பிரமணியம், இரா.வீமராஜ் சொற்பொழிவாற்றினர்.