உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி விழா

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி விழா

வேலுார்: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், வரும் 7ம் தேதி, மகா சிவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது.அன்று காலை, 5:00 மணியளவில், அருணாசலேஸ்வரர் சன்னிதியில் லட்சார்ச்சனையும், அதையடுத்து, கோவில் உள்பிரகாரங்களில், லட்ச தீபங்களை ஏற்றி, பக்தர்கள் வழிபடும் நிகழ்ச்சியும் நடக்கிறது.அதை தொடர்ந்து, இரவு 8:30 மணிக்கு, முதல் கால பூஜையும், 11:00 மணிக்கு இரண்டாம் கால பூஜையும், நள்ளிரவு 12:00 மணிக்கு, மூன்றாம் கால பூஜையும், அதிகாலை 4:00 மணிக்கு, நான்காம் கால பூஜையும் நடக்கிறது. அருணாசலேஸ்வரர் சன்னிதி பின்புறம், மேற்கு திசை நோக்கி அமைந்துள்ள லிங்கோத்பவ மூர்த்திக்கு, சிறப்பு அபிஷேகமும் நடத்தப்படுகிறது.மேலும், அன்றைய தினம் மாலை, 6:00 மணி முதல், விடிய விடிய தேவாரப் பாடல்கள், இன்னிசை, பரத நாட்டியம் போன்ற நிகழ்ச்சி மற்றும் ராஜகோபுரம் முன், 108 தவில் மற்றும் நாதஸ்வரக் கலைஞர்களின் இசை நிகழ்ச்சியும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !