வசப்பத்தூர் காசி விஸ்வநாதர்கோவில் கும்பாபிஷேகம்
ADDED :5162 days ago
சிதம்பரம்:வசப்பத்தூர் காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.சிதம்பரம் அடுத்த வசப்பத்தூரில் அகஸ்தியரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட காசி விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் கோவிலில் திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேகம் நடந்தது.கடந்த 15ம் தேதி முதல் யாகசாலை பூஜைகள் துவங்கி நடந்து வந்தது. கும்பாபிஷேகத்தையொட்டி 19ம் தேதி காலை 6 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜை, அஷ்டடோத்ர அர்ச்னையும் நடந்தது.காலை 7.30 மணி முதல் 9 மணிக்குள் காசி விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடந்தது.வசப்பத்தூர் மற்றும் சுற்றுபுற கிராம பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.