கோவிலுக்குள் நுழையும் முன் கவனிக்க வேண்டியது என்ன?
ADDED :3906 days ago
சிவன் கோவில் கருவறைக்குள் நுழையும் இடத்தில் துவாரபாலகர் இருவர் நிற்பதைக் காணலாம். ஆட்கொண்டார், உய்யக்கொண்டார் என்று இவர்களைக் குறிப்பிடுவர். ஆட்கொண்டார் ஆள் காட்டி விரலை மட்டும் நீட்டியபடி நின்றிருப்பார். சிவன் ஒருவரே முழுமுதல் கடவுள் என்பதை இவரது நீட்டிய விரல் உணர்த்துகிறது. மற்றொருவரான உய்யக் கொண்டார் கையை விரித்துக் காட்டியபடி இருப்பார். இதன் மூலம் சிவனைத் தவிர வேறு யாரையும் சரணடையத் தேவையில்லை என்பதை உணர்த்துகிறார். வழிபாட்டிற்குச் செல்வோருக்கு இந்த உண்மையைச் சொல்வதே இவர்களது பணியாகும்.