சிவனுக்கு இரண்டு பங்கு!
ADDED :3906 days ago
கருவறையில் சுவாமிக்கு நைவேத்யம் செய்யும் போது திரை போடப்பட்டிருக்கும். திருஷ்டி தோஷம் ஏற்படும் என்பதால், யாரும் பார்க்காமல் இருக்க திரையால் மறைக்கின்றனர். மடைப்பள்ளியில் தயாரான உணவே சுவாமிக்கு நைவேத்யமாகப் படைக்கப்படும். நைவேத்யம் செய்த உணவை எட்டு பாகமாகப் பிரிப்பர். அதில் சிவனுக்கு 2 பங்கும், அம்மனுக்கு 2 பங்கும், முருகனுக்கு ஒரு பங்கும், பலிபீடம், அக்னி காரியத்திற்காக ஒரு பங்கும், ஆச்சாரியாருக்கு(அர்ச்சகர்) ஒரு பங்கும், பணியாளர்களுக்கு ஒரு பங்குமாகப் பிரித்துக் கொடுப்பர்.