உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஒரு தடவை பூசினா 2 குளியலுக்கு சமம்!

ஒரு தடவை பூசினா 2 குளியலுக்கு சமம்!

மார்க்கண்டேயருக்காக எமனைக் காலால் உதைத்தவர் சிவன். இதன்பின் எமன் தன் துõதர்களிடம், இனிமேல் நீங்கள் திருநீறு பூசிய பக்தர்களைக் கண்டால், அவர்களை வணங்கிச் செல்ல வேண்டும் என உத்தரவிட்டான். திருநீறுக்கு காப்பு, ரட்சை என்று பெயருண்டு. காப்பு, ரட்சை என்றால் பாதுகாப்பது என்று பொருள். சம்பந்தர் மதுரை சோமசுந்தரர் மீது பாடிய மந்திரமாவது நீறு பதிகம் திருநீற்றின் மகிமையை விளக்குகிறது. திருநீற்றை சுட்டுவிரல், நடுவிரல், மோதிரவிரல் மூன்றாலும் எடுக்க  வேண்டும். கீழே சிந்தாமல் சிவாயநம என்று சொல்லி நெற்றியில் அணிய வேண்டும். இதற்கு பஸ்ம ஸ்நானம்  அல்லதுதிருநீற்றுக் குளியல் என்று பெயர். காலையில் நீராடி திருநீறு பூசினால் தினமும் இரண்டு முறை குளித்ததற்கு சமம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !