தடை தகர்க்கும் தர்ம தேவதை!
ADDED :3906 days ago
கோவிலில் சிவதரிசனத்திற்கு அனுமதி அளிப்பவர் நந்தீஸ்வரர். சிவ ரகசியம் என்னும் ஆகமத்தில் இவரின் பெருமை கூறப்பட்டுள்ளது. இவருக்கு ரிஷபதேவர், நந்திகேஸ்வரர் என்றும் பெயருண்டு. சிவ பக்தர்களில் இவரே தலைமையானவர். சிவ ஆகமங்கள் அனைத்தும், நந்தி மூலமாகவே உலகிற்கு வெளிப்பட்டன. அடியவர்களுக்கு அருள்புரியும் போதெல்லாம் சிவபார்வதி நந்தி மீது எழுந்தருளி காட்சியளிப்பர். எப்போதும் சிவ தியானத்தில் ஆழ்ந்திருக்கும் இவரை தர்ம தேவதையின் வடிவமாகப் போற்றுவர். இவரின் இரு கொம்புகளுக்கு இடையே நின்று சிவன் நடனம் புரிவதாக ஐதீகம். நந்தீஸ்வரரை வழிபட்டால் தடைகள் அகன்று முயற்சிகளில் வெற்றி உண்டாகும்.