லிங்கத்தில் மும்மூர்த்தி!
ADDED :3906 days ago
கருவறையில் சிவபெருமான் லிங்க வடிவாக காட்சியளிப்பார். இதன் அடிப்பகுதி பிரம்ம பாகம் என்றும், நடுப்பகுதி விஷ்ணுபாகம் என்றும், மேல்பகுதி சிவபாகம் என்றும் பெயர் பெறும். இவை படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழில்களைக் குறிக்கும் விதத்தில் உள்ளன. வாமை, சேஷ்டை, ரவுத்ரி, காளி, கல்வி கரணி, பலவிகரணி, பலபிரதமனி, சர்வ பூத தமனி, மனோன்மணி என்னும் நவசக்திகள் விஷ்ணு பாகத்தில் அடங்கியுள்ளதாக ஐதீகம். பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளும், நவசக்திகளும் ஒன்று சேர்ந்தே சிவலிங்கமாக வீற்றிருக்கின்றனர்.