உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவாரூர் தேரை ஆழித்தேர் என்பது ஏன்?

திருவாரூர் தேரை ஆழித்தேர் என்பது ஏன்?

எந்தவிதமான நவீன இயந்திர வசதிகளும் இல்லாத பழங்காலத்தில் பிரமாண்டமான கோவில்களும், தேர்களும் மனித உழைப்பினால் மட்டுமே அமைக்கப்பட்டன. அப்போது செய்யப்பட்ட தேர்களில்  மிகப்பெரியது திருவாரூர் தேர். ஆழி என்றால் பரந்து விரிந்த என்று பொருள். அதனால் தான் கடலை ஆழி என்கிறார்கள். சுனாமியை ஆழிப் பேரலை என்கிறார்கள். பரந்து விரிந்த பிரமாண்டமான தேராக இயந்திர உதவிஇல்லாமல் பக்தர்கள் வடம்பிடித்து இழுத்து வீதிவலம் வர பல நாட்கள் ஆகும். 1400 ஆண்டுகளுக்கு முன்பே ஆழித்தேர் வித்தகனை என்று திருநாவுக்கரசர் தேவாரத்தில் பாடியுள்ளார்.  அத்தகைய சிறப்புடையது திருவாரூர் தேர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !