/
கோயில்கள் செய்திகள் / முன்னோர் வேண்டிய நேர்த்திக்கடனை செலுத்தாவிட்டால் சந்ததிக்கு பாதிப்பு ஏற்படுமா?
முன்னோர் வேண்டிய நேர்த்திக்கடனை செலுத்தாவிட்டால் சந்ததிக்கு பாதிப்பு ஏற்படுமா?
ADDED :3906 days ago
நேர்த்திக்கடன் இரண்டு வகையானது. அவரவர் குடும்ப வழக்கப்படி குழந்தைக்கு மொட்டையடித்து காது குத்துவது, மாவிளக்குப் போடுவது, சுபநிகழ்ச்சிகள் நடத்தும் முன் சிறப்பு பூஜை செய்வது, குலதெய்வ வழிபாடு செய்வது ஆகியவை அவசியம் செய்ய வேண்டியதாகும். இதைச்செய்யாவிட்டால் சந்ததிகளை பாதிக்க வாய்ப்புண்டு. இரண்டாவது ஏதாவது ஒரு செயல் நிறைவேற வேண்டி தெய்வத்துக்கு நேர்ந்து கொண்டு அதைச்செய்யாமலிருப்பது அவர்களை மட்டுமே பாதிக்கும். சந்ததிகளுக்கு பாதிப்பு ஏற்படாது.