உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விடிய விடிய அபிஷேகம்!

விடிய விடிய அபிஷேகம்!

மகாசிவராத்திரி இரவில் நான்கு ஜாம காலத்தில் விடிய விடிய சிவனுக்கு அபிஷேகம், அலங்காரம் நடக்கும். அது குறித்த விபரம் இங்கு தரப்பட்டுள்ளது.

முதல் ஜாமம் : பஞ்சகவ்யம் (பால், தயிர், நெய், கோமியம், சாணம் கலந்த கலவை) அபிஷேகம். சந்தனப் பூச்சு, வில்வம், தாமரை மலர் அலங்காரம், அர்ச்சனை, பாசிப்பருப்பு பொங்கல் நிவேதனம். ரிக் வேத பாராயணம்.

இரண்டாம் ஜாமம் : சர்க்கரை, பால், தயிர், நெய், பஞ்சாமிர்த அபிஷேகம். பன்னீருடன் சேர்த்து  பச்சைக் கற்பூரம் சாத்துதல். துளசி அலங்காரம், வில்வத்தால் அர்ச்சனை. பாயசம் நிவேதனம். யஜுர் வேத பாராயணம்.

மூன்றாம் ஜாமம் - தேன் அபிஷேகம். பச்சைக்  கற்பூரம் சாத்துதல். மல்லிகை அலங்காரம். வில்வ அர்ச்சனை. எள் அன்னம் நிவேதனம், சாம வேத பாராயணம்.

நான்காம் ஜாமம் - கரும்புச்சாறு அபிஷேகம். நந்தியாவட்டை மலர் சாத்துதல். வாசனை மலர்களால் அலங்காரம் மற்றும் வில்வ அர்ச்சனை, சுத்தான்னம் (வெள்ளைச்சோறு) நிவேதனம், அதர்வண வேத பாராயணம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !