உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வன பத்ரகாளியம்மன் கோவிலில் வழிபாடு: சென்னிமலையில் கடைகளுக்கு விடுமுறை

வன பத்ரகாளியம்மன் கோவிலில் வழிபாடு: சென்னிமலையில் கடைகளுக்கு விடுமுறை

சென்னிமலை: சென்னிமலை பஸ் ஸ்டாண்டில் கடை வைத்துள்ளவர்கள் அனைவரும், நேற்று விடுமுறை எடுத்துக் கொண்டு, மேட்டுப்பாளையம் வன பத்ரகாளியம்மன் கோவிலுக்கு, சிறப்பு வழிபாடு செய்ய சென்றனர். ஈரோடு மாவட்டம், சென்னிமலை பஸ்ஸ்டாண்டில் உள்ள வணிக வளாகத்தில், 18 கடைகள் உள்ளன. இதில் மருந்துகடை, ஓட்டல், பேக்கரி, மொபைல்போன், பழக்கடை என பல கடைகள் அமைந்துள்ளது. இங்கு பல மதத்தினர், பல ஜாதியினர் டவுன் பஞ்சாயத்தில் ஏலம் எடுத்து கடை நடத்தி வருகின்றனர். அனைவரும் ஒற்றுமையாக உள்ளனர் என்பதை காட்டுவதற்கும், ஆண்டு முழுவதும் நல்ல முறையில் கடைகள் செயல்பட வேண்டும் என்பதற்காக, கடை உரிமையாளர்கள், பணியாளர்கள் ஒன்றாக சேர்ந்து, கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வன பத்திரகாளியம்மன் கோவிலுக்கு சென்று ஆடு, கோழி பலி கொடுத்து சிறப்பு பூஜை வழிபாடு நடத்தி வருகின்றனர். ஒன்பதாவது ஆண்டாக சிறப்பு வழிபாடு பூஜையில் கலந்து கொள்ள அனைவரும் சென்று விட்டதால், கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும் பூஜைக்கு செல்வதை தெரியப்படுத்த, பேனர் வைத்துள்ளனர். ஆனால், புதியதாக பஸ் ஸ்டாண்ட் வருவோர் ஏதோ கடையடைப்பு போராட்டம் நடக்கிறது என நினைக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !