ஈஷா யோகாவுக்கு பக்தர்கள் பாதயாத்திரை
ADDED :3543 days ago
சத்தியமங்கலம்: சிவராத்திரியை முன்னிட்டு, பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வெள்ளிங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மையத்துக்கு பாத யாத்திரையாக வரத் துவங்கினர். கோவை அருகே உள்ள வெள்ளிங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மையத்துக்கு உலக அளவில் பக்தர்கள் உள்ளனர். இங்கு ஒவ்வொரு ஆண்டும் சிவராத்திரி விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இம்மாதம், 7ம் தேதி சிவராத்திரியை முன்னிட்டு, சென்னை மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் காவி உடை அணிந்து பாதயாத்திரையாக ஈஷா யோகா மையத்திற்கு வருகின்றனர். நேற்று காலை முதல் இரவு வரை நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் பாத யாத்திரையாக சத்தியமங்கலம் வழியாக ஈஷா யோக மையம் சென்றனர்.