நெல்லிக்குப்பம் கால பைரவருக்கு சிறப்பு அலங்காரம்!
ADDED :3544 days ago
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் திருக்கண்டேஸ்வரம் கால பைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை நடந்தது. தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு கால பைரவருக்கு பால், தயிர் உட்பட 18 பொருட்களால் அபிஷேகமும், தீபராதனையும் நடந்தது. வெள்ளிக்காப்பு அலங்காரத்தில் கால பைரவர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். உற்சவர் கோவிலை வலம் வந்து அருள்பாலித்தார். பூஜைகளை சேனாபதி குருக்கள் செய்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.