உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காளியம்மனுக்கு 110 ஆடு வெட்டி வழிபாடு

காளியம்மனுக்கு 110 ஆடு வெட்டி வழிபாடு

செங்கம்: திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே காளியம்மன் கோவிலில், மலைவாழ் மக்கள், 110 ஆடு வெட்டி, பொங்கல் வைத்து வழிபட்டனர். செங்கம் அடுத்த ஜவ்வாதுமலை அடிவாரத்தில் உள்ள துரிஞ்சிக்குப்பம் கிராமத்தில், காளியம்மன் கோவில் உள்ளது. இங்கு, ஆண்டு தோறும் ஊர் சார்பில் பொங்கல் விழா நடந்து வருகிறது. விழாவின் போது, அப்பகுதியில் வசிக்கும் ஒவ்வொருவரும், தங்கள் வீட்டின் சார்பில், ஒரு ஆடு வெட்டி பொங்கல் வைப்பது வழக்கம், அதன்படி, இந்த ஆண்டு திருவிழாவை முன்னிட்டு, அப்பகுதியில் உள்ளவர்கள் தங்களது உறவினர்களுடன் வந்து, கோவிலில் ஆடு வெட்டி, பொங்கல் வைத்து வழிபட்டனர். திருவிழாவையொட்டி, காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடந்தது. இதையடுத்து அம்மனுக்கு, 110 ஆடுகளை வெட்டி, கிராம மக்கள் ஒன்று சேர்ந்து பொங்கல் வைத்து வழிபட்டனர். பின்னர் கிடாவை அங்கேயே சமைத்து, உறவினர்கள், மற்றும் நண்பர்களுக்கு விருந்து பரிமாறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !