பள்ளிகொண்டீஸ்வரர் கோவிலில் தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு பூஜை
ADDED :3649 days ago
ஊத்துக்கோட்டை : சுருட்டப்பள்ளி, பள்ளிகொண்டீஸ்வரர் கோவி லில் உள்ள தாம்பத்ய தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. ஊத்துக்கோட்டை அடுத்த, சுருட்டப்பள்ளி கிராமத்தில் உள்ளது சர்வமங்களா சமேத பள்ளிகொண்டீஸ்வர் கோவில். இக்கோவில் வளாகத்தில் அமைந்துள்ள தாம்பத்ய தட்சிணாமூர்த்திக்கு, நேற்று, காலை, 6:00 மணிக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட அபிஷேகப் பொருட்களால் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது.பின், மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமியை வழிபட்டனர். இதேபோல், ஊத்துக்கோட்டை ஆனந்தவல்லி சமேத திருநீலகண்டேஸ்வரர் கோவில், தாராட்சி லோகாம்பிகை உடனுறை பரதீஸ்வரர் கோவில் உள்ளிட்ட பெரும்பாலான கோவில்களில் தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.