செல்லியாண்டியம்மன் கோவில் தேரோட்டம்
ADDED :3546 days ago
பவானி: பவானி செல்லியாண்டியம்மன் கோவில் தேரோட்டம் நேற்று வெகு விமர்சையாக நடந்தது. பவானி செல்லியாண்டியம்மன், எல்லையம்மன், மாரியம்மன் கோவில் பொங்கல் விழா நடந்து வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது. இதையொட்டி காலை, 9 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. காலை, 11 மணிக்கு தொடங்கிய தேரோட்டம், பிற்பகல், 1.30 மணிக்கு நிறைவடைந்தது. அக்ரஹாரம், கூடுதுறை ரோடு, மேட்டூர் மெயின் ரோடு, காவேரி வீதி வழியாக சென்ற தேர், தேர்வீதி வழியாக சென்று கோவிலில் நிலை பெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் இழுத்தனர். இன்று பரிவேட்டை நிகழ்ச்சி, நாளை (5ம் தேதி) தெப்ப உற்சவம் நடக்கிறது. ஆறாம் தேதி மஞ்சள் நீராட்டத்துடன் விழா நிறைவு பெறுகிறது.