குஜிலியம்பாறை காளியம்மன் கோயிலில் மாசிப் பெருந்திருவிழா
ADDED :3546 days ago
குஜிலியம்பாறை: குஜிலியம்பாறை காளியம்மன் கோயிலில் மாசிப் பெருந்திருவிழா நடந்தது.பிப்.28ல் பூங்கரகம் வீதி உலா வருகையுடன் துவங்கியது. கரகம் பாலித்தல், வாணவேடிக்கை, பொங்கல் வைத்தல், அம்மன் வீதிஉலா நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று கரகம் நீராட செல்லுதல் நிகழ்ச்சியும், கிராம பல்சுவை நிகழ்ச்சியும் நடந்தன. ஊர் பெரியவர்கள் கோவிந்தராஜ், சுகுமாரன், ராஜேந்திரன், நாகமையன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.