உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காஞ்சிபுரம் ஹயகிரீவர் கோவிலில் மாணவர்கள் வேண்டுதல்

காஞ்சிபுரம் ஹயகிரீவர் கோவிலில் மாணவர்கள் வேண்டுதல்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஹயகிரீவர் கோவிலில், நேற்று மாலை முதல் இரவு வரை மாணவர்கள், தங்கள் பெற்றோருடன் சுவாமி தரிசனம் செய்தனர்.தமிழகம் முழுவதும் இன்று, பிளஸ் 2 பொதுத் தேர்வு நடக்கிறது. கல்வி கடவுளான ஹயகிரீவரை வழிபட்டால், அதிக மதிப்பெண் பெற அருள்புரிவார் என்பது மாணவர்களின் நம்பிக்கை. இதனால், காஞ்சிபுரத்தில் உள்ள ஹயகிரீவர் கோவிலுக்கு குவிந்த மாணவர்கள், சுவாமியின் பாதத்தில், ஹால் டிக்கெட்டை வைத்து வணங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !