உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி பங்குனி உத்திர திருவிழாவிற்கு இரண்டாயிரம் போலீசார் பாதுகாப்பு

பழநி பங்குனி உத்திர திருவிழாவிற்கு இரண்டாயிரம் போலீசார் பாதுகாப்பு

பழநி: பழநி பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு கிரிவீதி, பஸ் ஸ்டாண்ட், அடிவாரம் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்கப்படுகிறது. பழநி பங்குனிஉத்திர விழா முன்ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. கலெக்டர் ஹரிஹரன் தலைமைவகித்தார். கோயில் இணை ஆணையர் ராஜமாணிக்கம், சப் கலெக்டர் வினித், டி.ஆர்.ஓ., நாகேந்திரன் முன்னிலைவகித்தனர்.

கூட்ட விபரம்: இணை ஆணையர்: மார்ச் 17 முதல் 26 வரை பங்குனி உத்திர விழா நடக்கிறது. பக்தர்களின் கூட்டத்திற்கு ஏற்ப மலைக்கோயில் வழிகள் ஒருவழிப்பாதையாக மாற்றப்படும். தேரோட்டத்திற்கு வசதியாக கிரிவீதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். தைப்பூசவிழாபோல அனைத்துதுறையினரும் ஒத்துழைக்க வேண்டும்.

கலெக்டர்: சுகாதாரம், குடிநீர், மருத்துவ, கூடுதல் பஸ், ரோடுவசதி உள்ளிட்ட ஏற்பாடுகள் சிறப்பாக இருக்க வேண்டும், குறிப்பாக கழிப்பறைகள், குவியும் குப்பையை நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகள் உடனடியாக அகற்ற வேண்டும். கூடுதலாக பஸ்கள் இயக்கவேண்டும். ஆட்டோ, வேன், டோல்கேட் கூடுதல் கட்டண வசூல் புகாரின்பெயரில் நடவடிக்கை எடுக்கப்படும். தடையில்லா மின்சாரம் வழங்க ஏற்பாடு செய்யப்படும். பழநி டி.எஸ்.பி., சண்முகசுந்தரம்: இரண்டாயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். குற்றசம்பவங்களை தடுக்க தனியாக

"மப்டியில் ஒரு குழு பக்தர்கள் கூடும் இடங்களில் கண்காணிப்பில் ஈடுபடுவார்கள். கிரிவீதி, பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்டஇடங்களில் சி.சி.டி., கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. 15 உதவி மையங்கள் அமைக்கப்படும். போலி புரோக்கர்களை கண்டறிந்து கைது செய்யப்படும். குட்டி விமானம் மூலம் கண்காணிப்பு எஸ்.பி.,யிடம் ஆலோசனை செய்துமுடிவு எடுக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !