ஈரோடு கோட்டை சிவன் கோவிலில் சிவராத்திரி சிறப்பு ஏற்பாடு
ADDED :3546 days ago
ஈரோடு: மகா சிவராத்திரியை முன்னிட்டு, ஈரோடு ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில், 7ம் தேதி
இரு முறையும், 8ம் தேதி இரு முறையும் சிவனுக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. சந்தனம்,
மஞ்சள், தேன், பன்னீர், இளநீர், திருமஞ்சனம் உள்ளிட்ட வாசனை திரவிய பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்படுகிறது. விழாவையொட்டி, 7ம் தேதி மாலை, 6 மணி முதல், 8ம் தேதி காலை வரை கோவில் கதவுகள் சாத்தப்படாது. அபிஞஷகம் மட்டுமின்றி அன்றைய தினம், ருத்ர பாராயணமும் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.