உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பூர் ஹயக்கிரீவருக்கு சிறப்பு பூஜை

திருப்பூர் ஹயக்கிரீவருக்கு சிறப்பு பூஜை

திருப்பூர்: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்காக, ஸ்ரீ வீரராகவப்பெருமாள் கோவிலில் உள்ள ஸ்ரீ ஹயக்கிரீவர் சன்னதியில், மார்ச்,6ல் சிறப்பு யாகம் நடைபெற்றது.

திருப்பூர் ஸ்ரீ வீரராகவப் பெருமாள் கோவிலில், ஸ்ரீ லட்சுமி ஹயக்கிரீவர், தனி சன்னதில் எழுந்தருளியுள்ளார். கல்விக்கு அதிபதியான இவரை வணங்கினால், அதில் சிறப்படையலாம் என்பது ஐதீகம். அவ்வகையில், பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள், நினைவாற்றலுடனும், தன்னம்பிக்கையோடும் தேர்வெழுதி, சிறப்பாக தேர்ச்சி பெற வேண்டும் என்ற பிரார்த்தனையோடு, ஸ்ரீ லட்சுமி ஹயக்கிரீவருக்கு சிறப்பு யாகம் மற்றும் திருமஞ்சனம் நடத்தப்பட்டு வருகிறது.

திருவடி திருத்தொண்டு அறக்கட்டளை சார்பில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, நேற்று சிறப்பு யாகம் மற்றும் விசேஷ பூஜை நடைபெற்றன. நாம சங்கீர்த்தனம், சாத்துமறை, மகா தீபாராதனை நடந்தது. 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர். ஸ்ரீ ஹயக்கிரீவரிடம் வைத்து பூஜிக்கப்பட்ட, படம், பேனா, பென்சில் உள்ளிட்ட பொருட்களுடன் கூடிய, பாக்ஸ் வழங்கப்பட்டது. வரும், 13 மற்றும் 17ம் தேதி, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, காலை 9:00 மணி முதல் 12:00 வரை, சிறப்பு யாகம், பூஜைகள் நடக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !