உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தொழில், வியாபாரத்தில் பெரும் லாபம் வேண்டுமா?

தொழில், வியாபாரத்தில் பெரும் லாபம் வேண்டுமா?

தொழில், வியாபாரத்தில் அமோக லாபம் அடையவும், மூத்த சகோதரர்கள் நலமோடு வாழவும், வழக்கில் வெற்றி உண்டாகவும் ஞானசம்பந்தர் பாடிய இந்த தேவாரப் பாடலை தினமும் மாலையில் திருவிளக்கு முன் அமர்ந்து பக்தியுடன் படியுங்கள். வாசீ தீரவே, காசு நல்குவீர்; மாசுஇல் மிழலையீர்; ஏசல் இல்லையே. இறைவர் ஆயினீர்; மறைகொள் மிழலையீர்; கறைகொள் காசினை, முறைமை நல்குமே. செய்யமேனியீர்; மெய்கொள் மிழலையீர்; பைகொள் அரவினீர்; உய்ய நல்குமே. நீறு பூசினீர்; ஏறு அது ஏறினீர்; கூறு மிழலையீர்; பேறும் அருளுமே. காமன் வேவ, ஓர் துõமக் கண்ணினீர்; நாம மிழலையீர்; சேமம் நல்குமே. பிணிகொள் சடையினீர்; மணிகொள் மிடறினீர்; அணிகொள் மிழலையீர்; பணிகொண்டு அருளுமே. மங்கை பங்கினீர்; துங்க மிழலையீர்; கங்கை முடியினீர்; சங்கை தவிர்மினே. அரக்கன் நெரிதர, இரக்கம் எய்தினீர்; பரக்கும் மிழலையீர்; கரக்கை தவிர்மினே. அயனும் மாலுமாய் முயலும் முடியினீர்; இயலும் மிழலையீர்; பயனும் அருளுமே. பறிகொள் தலையினார், அறிவது அறிகிலார்; வெறிகொள் மிழலையீர்; பிரிவது அரியதே. காழிமா நகர் வாழி சம்பந்தன், வீழிமிழலை மேல், தாழும் மொழிகளே.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !