கிரிவலம் வரும் அண்ணாமலையார்!
ADDED :3897 days ago
திருவண்ணாமலை அக்னியிலிருந்து வந்தது என்றும், காந்த சக்தி உள்ளது என்றும் புவியியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அருணம் என்றால் - சூரியன், அசலம் என்றால் மலை. அருணாசலம் என்றால் - சிவந்த நிறம் கொண்ட மலை என்று பொருள். ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் இரவில் திருவண்ணாமலையில் மலையைச் சுற்றி பக்தர்கள் கிரிவலம் வருவர். 16 கி.மீ. தூர சுற்றளவுள்ள இந்த கிரிவலத்தை பக்தர்களை போன்று அண்ணாமலையார் திருவீதி உலாவாக ஆண்டுக்கு இருமுறை கார்த்திகை தீபதிருநாளின் மறுநாளும் தை மாதம் மாட்டுப் பொங்கல் அன்றும் வலம் வருகிறார்.