துவரிமான் கோயிலில் சிவராத்திரி களரி உற்சவம்!
ADDED :3609 days ago
துவரிமான்: மதுரை அருகே துவரிமான் கருப்பணச்சாமி,முத்தையா சுவாமி கோயிலில் சிவராத்திரி களரி உற்சவத்தில் சுவாமி வீதிஉலா நடந்தது. இக்கோயிலில் 5 நாட்களாக சிவராத்திரி உற்சவம் நடக்கிறது. நேற்று இக்கோயிலில் பெண்கள் பொங்கல் வைத்து பல்வேறு பழவகைகளுடன் சுவாமியை தரிசித்தனர். களரி உற்சவத்தை ஒட்டி பலமாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் கூடி மொட்டை காணிக்கைசெலுத்தி, கிடாவெட்டி சுவாமிக்கு படைத்து வேண்டுதலை நிறைவேற்றி வழிபட்டனர். சோழவந்தான் மேலரதவீதி அங்காள ஈஸ்வரியம்மன், வாலகுருநாதர் சுவாமி கோயிலில் நேற்று சிவராத்திரியை ஒட்டி பொங்கல் வைத்து சுவாமிக்கு பூஜை செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது. பின்னர் இரவு 9 மணிக்கு ரிஷபவாகனத்தில் அம்மன்சுவாமி வீதிஉலா நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை கோயில் பூசாரி ராஜமாணிக்கம் செய்திருந்தார்.