வேலுடையான்பட்டு கோவிலில் பங்குனி உத்திர உற்சவம்
நெய்வேலி: நெய்வேலி வேலுடையான்பட்டு கோவிலில் வரும் 13ம் தேதி பங்குனி உத்திர பிரம்மோற்சவம் துவங்குகிறது. அதனையொட்டி, வரும் 13ம் தேதியன்று கணபதி பூஜையுடன் பங்குனி உத்திர உற்சவம் துவங்குகிறது. 14ம் தேதி கொடியேற்றம் நடக்கிறது. அதனைத் தொடர்ந்து 21ம் தேதி வரை தினமும் மயில் வாகனம், ரிஷப வாகனம் என 7 நாட்கள் சுவாமி வீதியுலா நடக்கிறது. பின்னர் 22ம் தேதி 9ம் நாள் உற்சவத்தையொட்டி திருத்தேரில் சுவாமி வீதியுலா நடக்கிறது. பங்குனி உத்திர உற்சவத்தின் முக்கிய நிகழ்வாக வரும் 23ம் தேதி காவடி திருவிழாவையொட்டி மாவட்டத்தின் பல்வேறு ஊர்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காவடி சுமந்து சென்று முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்து நேர்த்திக்கடனை செலுத்துவர். மறுநாள் (24ம் தேதி) வாண வேடிக்கைகளுடன் தெப்பல் திருவிழா நடக்கிறது. 25ம் தேதி விடையாற்றி உற்சவத்துடன் பங்குனி உத்திர திருவிழா நிறைவடைகிறது. விழா ஏற்பாடுகளை நிர்வாக அறங்காவலர் பழனி தலைமையிலான அறங்காவலர்கள் சுந்தரமூர்த்தி, ஞானசேகரன், மோகன் மற்றும் நெய்வேலியைச் சுற்றியுள்ள கிராம மக்கள் செய்து வருகின்றனர்.