மேல்மலையனூர் கோவிலில் தீமிதி திருவிழா!
ADDED :3500 days ago
செஞ்சி: மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் இன்று தீமிதி விழா நடக்கிறது. விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் மாசி தேர் திருவிழா, கடந்த 7ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. மறுநாள் மயான கொள்ளை, 9 மற்றும் 10ம் தேதிகளில் தங்கநிற மர பல்லக்கில் அம்மன் வீதியுலா நடந்தது. இன்று தீ மிதி விழா நடக்கிறது. மாலை 4.௦௦ மணிக்கு அக்னி குளக்கரையில் இருந்து ஊர்வலமாக வந்து, 5.௦௦ மணிக்கு தீக்குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.