உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வித்தியாசமான கோவில் விழா: 1,000 கிடா பலி!

வித்தியாசமான கோவில் விழா: 1,000 கிடா பலி!

அந்தியூர்: அந்தியூரை அடுத்த சந்தியபாளையத்தில், பழமை வாய்ந்த அங்காளம்மன் கோவில் திருவிழா இரண்டு ஆண்டுகளுக்கு பின், நேற்று கொண்டாடப்பட்டது. இந்தக் கோவிலில், பூ வாக்கு கேட்டு, வாக்கு சொன்னால் மட்டுமே விழா எடுக்கப்படும். வாக்கு வரவில்லையென்றால் அந்த ஆண்டு விழா நடக்காது. இப்படியொரு வினோத நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. வாக்கு கிடைக்காமல் ஐந்து ஆண்டுகளாக, விழா நடக்காமல் இருந்துள்ளது. கடந்த, 2012க்குப் பிறகு வாக்கு கிடைக்கவில்லை. இந்நிலையில் இந்த ஆண்டு, விழா நடத்த அனுமதி கிடைத்தது. இதையடுத்து திருவிழா பூச்சாட்டுதலுடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் வைபவம் நேற்று நடந்தது. இதில், ஆயிரத்துக்கும் மேல் ஆடுகளை பலியிட்டு, பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தினர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், கலந்து கொண்டனர். நாளை மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !