முத்துக்காபட்டி கோவிலில் சுவாமி சிலைக்கு அபிஷேகம்
ADDED :3500 days ago
சேந்தமங்கலம்: முத்துக்காபட்டி பெரியசாமி கோவிலில், புதிதாக அமைக்கப்பட்ட சுவாமி சிலைக்கு அபிஷேகம் நடந்தது. சேந்தமங்கலம் அடுத்த, முத்துக்காபட்டி புதுக்கோம்பையில் உள்ள பெரியசாமி கோவிலில், ஒவ்வொரு ஆண்டும், தை அமாவாசை நாளன்று, பக்தர்கள் அதிகளவில் சுவாமி தரிசனம் செய்கின்றனர். மேலும், வேண்டுதல் நிறைவேறியதற்காக நாள்தோறும், கோழி, கிடாவெட்டி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். நேற்று, இக்கோவில் உள்ள, கருப்பண்ணசாமி, முனியப்பசுவாமிக்கு புதிதாக சிலை அமைக்கப்பட்டது. காலை, 7.30 மணியிலிருந்து, 8.20 மணி வரை ஹோமம், அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தன.