உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் முதல் முறையாக பங்குனி விழா

தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் முதல் முறையாக பங்குனி விழா

நங்கநல்லுார்: நங்கநல்லுார், தர்மலிங்கேஸ்வரர் கோவிலில், பங்குனி உத்திர விழா, முதல் முறையாக நடைபெற உள்ளது. நங்கநல்லுார், தர்மலிங்கேஸ்வரர் கோவிலில், பங்குனி உத்திர பெருவிழா, வரும், 14ம் தேதி முதல், 23ம் தேதி வரை நடைபெறும். விழா, 14ம் தேதி காலை, 6:00 மணிக்கு, கொடியேற்றத்துடன் துவங்குகிறது. அதில், 17ம் தேதி இரவு, 7:30 மணிக்கு, அதிகார நந்தி வாகனத்தில் திருவீதியுலா, 20ம் தேதி காலை, 7:00 மணிக்கு, திருத்தேரில் சுவாமி திருவீதியுலா, இறுதி நாளான, 23ம் தேதி மாலை, 5:30 மணி முதல், 7:00 மணி வரை, திருக்கல்யாணம் ஆகியவை நடைபெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !