மேட்டு மருதூரில் மாசி சிவராத்திரி தேரோட்டம்
ADDED :3499 days ago
குளித்தலை: குளித்தலை, மேட்டு மருதூரில் மாசி சிவராத்திரியையொட்டி, அங்காளம்மன் கோவில் மூன்றாம் ஆண்டு நிகழ்ச்சியாக தேரோட்டம் நடந்தது. 30 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று பின்னர், கோவில் வந்தடைந்தது. தேரோட்டத்தில் கலந்து கொள்ள திருச்சி, கரூர், சேலம், ஈரோடு, தஞ்சை. கோவை, திண்டுக்கல் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வந்திருந்தனர். தேரோட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.