உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அழகர்கோவில் சோலைமலை முருகனுக்கு வைரக்கிரீடம்

அழகர்கோவில் சோலைமலை முருகனுக்கு வைரக்கிரீடம்

அழகர்கோவில்: அழகர்கோவில் சோலைமலை முருகன் கோயிலில் சுவாமிக்கு நாளை முதன்முதலாக வைரக்கிரீடம் அணிவிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு ரூ.5 கோடி மதிப்பில் கோயிலில் திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேகம் நடந்தது. பின் முருக பக்தர்கள் சபை சார்பில் ரூ.30 லட்சத்தில் வைர வேல், தங்கத் தேர் செய்யப்பட்டன. இதைதொடர்ந்து சுவாமிக்கு வைரக்கிரீடம் செய்ய தொழிலதிபர் சுப்பையா தலைமையில் முருகபக்தர்கள் சபையினர் முன் வந்தனர். அறநிலையத்துறை அனுமதி அளித்ததை தொடர்ந்து அதற்கான பணி கடந்த அக்.,ல் துவங்கியது. பணிகள் முடிந்த நிலையில் நாளை சுவாமிக்கு வைரக்கிரீடம் அணிவிக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !