உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அஷ்டபுஜ பெருமாள் கோவிலில் பாலாலயம்

அஷ்டபுஜ பெருமாள் கோவிலில் பாலாலயம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், புஷ்பவல்லி சமேத அஷ்டபுஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகத்திற்கான பாலாலயம் நேற்று நடைபெற்றது. காஞ்சிபுரம்  அஷ்டபுஜ பெருமாள் கோவிலில், 12 ஆண்டுகளுக்கு முன் கும்பாபிஷேகம் நடந்தது. இதனால், இந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடத்த கோவில்  நிர்வாகம் முடிவு செய்து, நேற்று காலை, 7:00 மணியளவில், அதற்கான பாலாலயம் நடந்தது. புஷ்பவல்லி தாயார், பெருமாள் விமானம்,  ÷ மல்தளம், ராஜகோபுரம், வெளிப்புற தரைதளம் போன்ற பணிகள், 25 லட்சம் ரூபாய் மதிப்பில் நடக்க இருக்கின்றன. இந்த பணிகளை ஆறு  மாதத்திற்குள் முடித்து, இந்த ஆண்டு இறுதிக்குள் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளதாக, கோவில் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !