உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தங்கக் கோவிலில் 4ம் ஆண்டு விழா

தங்கக் கோவிலில் 4ம் ஆண்டு விழா

வேலூர்: வேலூர் அடுத்த ஸ்ரீபுரம் தங்க கோவிலில் நான்காம் ஆண்டு விழா இன்று நடக்கிறது. வேலூர் அடுத்த ஓம் சக்தி நாராயணி பீடம் சார்பில் பல்வேறு சமுதாய பணிகள் நடந்து வருகின்றது. இதன் ஒரு பகுதியாக அனைத்து மக்களுக்கு ஆன்மிகத்தை வளர்க்க ஸ்ரீ புரத்தில் லட்சுமி நாராயணி தங்க கோவிலை சக்தி அம்மா அமைத்தார். தங்க கோவில் நான்காம் ஆண்டு விழா இன்று நடக்கின்றது. விழாவையொட்டி காலை 11 மணிக்கு சஹஸ்ர சண்டி யாகம் நடக்கின்றது. சக்தி அம்மா யாகத்தை நடத்துகின்றார். மாலை 6.30 மணிக்கு நாராயணி பீடத்தில் இருந்து ஸ்ரீ புரத்திற்கு கலச ஊர்வலம் நடக்கின்றது. இரவு 8 மணிக்கு லட்சுமி நாராயணிக்கு சக்தி அம்மா கலச அபிஷேகம் செய்கின்றார். ஏற்பாடுகளை நாராயணி பீடம் மேலாளர் சம்பத் செய்து வருகின்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !