நாட்டிற்கு நல்ல தலைவர் வேண்டி நடைபயணம்
ADDED :3607 days ago
சங்ககிரி: நாட்டிற்கு நல்ல தலைவர் அமைய வேண்டும் என, புனித அந்தோனியார் ஆலயம் சார்பாக நடைபயணம் சென்றனர். உலக அமைதிக்காகவும், நல்ல தலைவர்கள் நாட்டிற்கு அமைந்திடவும் வேண்டி, சங்ககிரி புனித அந்தோனியார் ஆலய பங்கு தந்தை பென்ஜமின் சந்தனராஜ் தலைமையில், 100 பேர் நடைபயணம் சென்றனர். இந்த பயணம் அந்தோனியார் ஆலயத்திலிருந்து இடைப்பாடி, கேனேரிபட்டி, பூதப்பாடி வழியாக பூமனூர் புனித பெரிய நாயகி அருட்தலம் வரை சென்று நிறைவடைந்தது.