விநாயகருக்குரிய அர்ச்சனை இலைகள்!
ADDED :3695 days ago
விநாயகப் பெருமானே மூலமுதற்பொருள். எந்தச் செயலைச் செய்தாலும் விநாயகப் பெருமானை வழிபாடு செய்து தொடங்குவது நம் மரபு. விநாயகருக்கு அருகம்புல் உகந்தது. இதுதவிர, அவரது பூஜைக்குரிய மேலும் சில இலைகளையும், அதற்கான பலன்களையும் தெரிந்து கொள்ளுங்கள்.
மருத இலை - மகப்பேறு உண்டாகும். எருக்க இலை - குழந்தை பாக்கியம், அரச இலை - எதிரி தொல்லை நீங்கும், அகத்தி இலை -கவலை விலகும், அரளி இலை - அன்பு நிலைக்கும், வில்வ இலை- இன்பம் பெருகும், வெள்ளெருக்கு - சகல சவுபாக்கியம், மாதுளை இலை - கீர்த்தி உண்டாகும், கண்டங்கத்தரி இலை - லட்சுமி கடாட்சம்.