ராகவேந்திரர் ஜெயந்தி விழா
ADDED :3526 days ago
ஈரோடு: ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி ஆற்றின் கரையில் உள்ள, ராகவேந்திரர் கோவிலில், ராகவேந்திரர் ஜெயந்தி விழா, நேற்று நடத்தது. இதையொட்டி அதிகாலை மூலவருக்கு பால், தேன், கரும்புச்சாறு அபிஷேகங்கள் நடந்தன. தொடர்ந்து ரிக் வேதம், ஸம்ஹீதா ஹோமம் நடந்தது. கல்கத்தா ஆச்சார்யார்கள் ஹோமத்தை நடத்தினர். சேலம் குரு பிரசாத் ஆச்சாரியார், ஆன்மிக சொற்பொழிவு நிகழ்த்தினார். மாலையில் மகா தீபாராதனை நடந்தது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.