சைதன்ய நிலை என்றால் என்ன?
ADDED :3890 days ago
ஸச்-சித்-ஆனந்தம் என்ற மூன்றும் கடவுளின் லட்சணம். என்றும் இருப்பது ஸத், எல்லாவற்றையும் அறிவது சித், குறைவற்ற இன்பம் ஆனந்தம். இறைவனைப் போன்ற பரிபூரண ஞானத்தை அடைவது சைதன்ய நிலையாகும் ஸத்-சித்-ஆனந்தம் என்ற மூன்றும் பிரமத்தின் சொரூப லட்சணம் என்று வேதாந்தம் கூறுகிறது. ஆன்மாவோடு ஒன்றி ஆன்மாவாகவே இருப்பது, ஆன்ம அனுபூதியில் திளைத்திருப்பதுதான் சைதன்ய நிலையாகும். இந்த நிலையை, ஸ்வஸ்வரூப அனுஸந்தானம் என்று அழகாக விவேகசூடாமணி குறிப்பிடுகிறது. இறையுணர்வில் ஊன்றி இறைவனோடு இரண்டறக் கலந்திருக்கும் அத்வைத அனுபூதியே சைதன்ய நிலையாகும்.