ஞானயோகம், கர்மயோகம் ஆகிய இரண்டில் சிறந்தது எது?
ADDED :3890 days ago
ஆரம்ப நிலையில் உள்ளவனுக்குக் கர்ம யோகம் ஏற்றது. அவனே உச்சிநிலையை அடைந்துவிட்டால், அப்போது ஞானயோகமும் துறவும் தானாக வே அவனுக்குச் சிந்திக்கும். ஆன்மிகப் பயணத்தின் ஆரம்ப நிலையாகக் கர்மயோகமும், இறுதிநிலையாக ஞான யோகமும் விளங்குகின்றன. கர்ம யோகம், ஞானயோகம், பக்தியோகம் ஆகிய மூன்றும் ஒன்றோடு ஒன்று தொடர்பில்லாத தனித்தனியான ஆன்மிகப் பயிற்சிகள் அல்ல. மாறாக, இவை ஒன்றுடன் நெருங்கிய தொடர்புடையவை. கர்மயோகத்திலும் ஞானயோகத்தின் அம்சங்கள் கர்மரூபத்தில் (செயல் வடிவத்தில்) வெளிப் படும். ஆன்மிக வளர்ச்சியில் முன்னேற முன்னேற, கர்ம யோகி நாளடைவில் ஞானயோகியாகப் பழுக்கிறான்.