உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்போடவாதம் என்றால் என்ன?

ஸ்போடவாதம் என்றால் என்ன?

ஒரே மூல சப்தத்திலிருந்து எல்லாம் வெளிவந்து, - ஓங்காரத்திலிருந்துதான் அனைத்தும் தோன்றியது என்ற வாதம் (கருத்து) ஸ்போடவாதம் எனப் பெறுகிறது. நாதம் என்பது ஓம் என்ற ஒலியையும், பிந்து என்பது ஒளியையும் குறிக்கும். உலகில் பல வகையான ஒலிகளைக் கேட்கிறோம். பல  வகையான ஒளிகளைப் பார்க்கிறோம். உதாரணமாக, ஒலி இருப்பதால் தான் நாம் ஒருவர் பேசுவதை மற்றொருவர் புரிந்துகொள்கிறோம். ஒளி என்ற  ஒன்று இருப்பதால்தான் உலகிலுள்ளவற்றை நாம் பார்க்க முடிகிறது. ஒலி, ஒளி முதலானவற்றிலிருந்தே பிரபஞ்சம் முழுவதும் தோற்றத்திற்கு வந்து  செயல்படுகிறது என்பதால் - நாதபிந்து கலாதி, என்று பரம்பொருளை ஸ்போடவாதம் குறிப்பிடுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !