கோவிந்தராஜ பெருமாள் கோவில் ஸ்ரீ ஜெயந்தி உறியடி உற்சவம்
ADDED :5160 days ago
சிதம்பரம் : சிதம்பரம் கோவிந்தராஜபெருமாள் கோவில் ஸ்ரீ ஜெயந்தியையொட்டி நகரில் ஐந்து இடங்களில் உறியடி உற்சவம் நடந்தது. சிதம்பரம் கோவிந்தராஜ பெருமாள் கோவில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். குலசேகர ஆழ்வார், திருமங்கை ஆழ்வார் மங்களாசனம் செய்து உள்ளனர். இக்கோவிலில் ஸ்ரீ ஜெயந்தி விழாவையொட்டி நகரில் ஐந்து இடங்களில் உறியடி உற்சவம் நடத்தப்பட்டது. கோவிந்தராஜ பெருமாள் கோவில் உற்சவ மூர்த்தியான சித்ரகூடத்துள்ளான் வீதியுலாவாக கொண்டு வரப்பட்டு சாமிக்கு முன்பு உறியடி உற்சவம் நடத்தப்பட்டது.