சத்திப்பட்டு கோவிலில் சிவபூஜை பெருவிழா
ADDED :5160 days ago
விழுப்புரம் : சத்திப்பட்டில் வரும் 27ம் தேதி சிவனிரவு சிவபூஜை பெருவிழா நடக்கிறது. விழுப்புரம் அடுத்த சத்திப்பட்டு கிராமத்தில் உள்ள சத்தீஸ்வரர் கோவிலில் வரும் 27ம் தேதி சிவனடியார் திருக்கூட்டத்தின் சார்பில் 72வது மாத சிவனிரவு சிவபூஜை வழிபாட்டுப் பெருவிழா நடக்கிறது. அன்று மதியம் 2.45 மணிக்கு இடப கொடியேற்றுதலும், திருமுறை திரு வீதியுலாவும் நடக்கிறது. தொடர்ந்து மாலை 5 மணிக்கு சிவனடியார்களின் சிவபூஜை வழிபாடுகள் நடக்கிறது. பெருவிழாவைத் தொடர்ந்து இரவு 7 மணிக்கு ஏககால தீபாராதனை நடக்கிறது. சிவனடியார்கள், பக்தர்கள் பலர் கலந்துகொள்கின்றனர். பெருவிழா பூஜைக்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்துள்ளனர்.