பஞ்சமகாபாபம் என்பவை யாவை?
ADDED :3889 days ago
1. கருவிலுள்ள சிசுவைக் கொல்லுதல், 2. பிராம்மணனைக் கொல்லுதல், 3. பெண்ணைக் கொல்லுதல், 4. பசுவைக் கொல்லுதல், 3. கள்குடித்தல் - இந்த ஐந்தையும் பஞ்சமகாபாவம் அல்லது, பஞ்சமாபாதகம் என்று சொல்வார்கள்.
பண்டைய தமிழகத்தில் 1. பசுவின் மடியை அறுத்தல், 2. பெற்றோர்களுக்குத் தவறு இழைத்தல் 3. பெண்ணின் வயிற்றிலுள்ள கருவைச் சிதைத்தல் ஆகிய இந்த மூன்றும் மிகப் பெரும் பாவங்களாகக் கருதப்பட்டுள்ளன. இந்த மூன்று பாவங்களுக்கும் கூட கழுவாய், அதாவது பாவமன்னிப்பு என்று சொல்லப்படுகிற அதாவது பிராயசித்தம் உண்டு, ஆனால் செய்நன்றி கொன்றவனுக்கோ விமோசனம் இல்லை என்பது தமிழர் கருத்தாக இ ருந்துள்ளது.