தர்மம் என்றால் என்ன? எது தர்மம்?
ADDED :3889 days ago
தர்மம் என்ற சம்ஸ்கிருதச் சொல்லைத் தமிழில் அறம் என்று வழங்குகிறோம். உள்ளத்தில் அழுக்கு இல்லாமல் இருப்பது மனத்தில் மாசு இல்லாமல் இருப்பது அறமாகும். மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன் (திருக்குறள் - 34) என்று திருவள்ளுவர் பெருமான் அறத்திற்கு இலக்கணம் கூறியுள்ளார்.