வெள்ளி புருஷாமிருக வாகனத்தில் கபாலீஸ்வரர் வீதியுலா!
ADDED :3693 days ago
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் பங்குனி பெருவிழாவின் நான்காம் நாளான நேற்று காலை, வெள்ளி புருஷாமிருக வாகனத்தில் கபாலீஸ்வரர் வீதியுலா நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
இன்று காலை, சவுடல் விமானத்தில் கபாலீஸ்வரர் எழுந்தருள்கிறார். இரவு, பஞ்சமூர்த்திகளும், வெள்ளி ரிஷப வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வர உள்ளனர்.