உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கொல்லங்குடி காளியம்மன் கோயிலில் பங்குனி விழா துவக்கம்

கொல்லங்குடி காளியம்மன் கோயிலில் பங்குனி விழா துவக்கம்

காளையார்கோவில்: கொல்லங்குடி வெட்டுடையார் காளியம்மன் கோயில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. கொல்லங்குடி அரியாகுறிச்சி வெட்டுடையார் காளியம்மன் கோயில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு, நேற்று காலை 8மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபி÷ஷகம் நடைபெற்றது. 10 மணியளவில் தங்ககொடிமரத்தில் கொடியேற்றம் நடந்தது, புனித நீர் ஊற்றி, அலங்கார தீபாராதனை நடந்தது. அம்மன் வெள்ளி அங்கி அணிந்து எழுந்தருளினார். இரவு 8.30 மணிக்கு அம்மனுக்கு காப்புக்கட்டுதல் நிகழ்வும், கேடக வாகனத்தில் அம்மன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மார்ச் 18ம்தேதி காலை 10மணிக்கு 108 சங்காபிஷேகம், 20ம்தேதி காலை 7.30 மணிக்கு தேருக்கு முகூர்த்தக்கால் நடுதல், 24 ம்தேதி காலை 9 மணிக்கு தேருக்கு கும்பம் சாத்துதல், இரவு தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளுதல் , 25ம் தேதி காலை 9மணிக்கு தேரோட்டமும், 26ம் தேதி காலை 10 மணிக்கு தீர்த்தவாரியுடன் விழா நிறைவுபெற உள்ளது. ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ரோஜாலிசுமதா, செயல்அலுவலர் இளங்கோவன் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !