திருப்பரங்குன்றம் தேரோட்டத்திற்கு தயார்
ADDED :3857 days ago
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழா மார்ச் 14ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியான சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை திருக்கல்யாணம் மார்ச் 26ல் நடக்கிறது. மார்ச் 27ல் கிரிவீதியில் தேரோட்டம் நடக்கிறது. இதற்காக பெரிய வைரத்தேரில் மராமத்து பணிகள் நேற்று துவங்கின.