உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உளுந்துார்பேட்டை சுப்ரமணியர் சுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா

உளுந்துார்பேட்டை சுப்ரமணியர் சுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை சுப்ரமணியர் சுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நடந்தது. விழாவையொட்டி 1008 பால் குட ஊர்வலம், காவடி ஊர்வலம், அலகு குத்தி தேர் இழுத்து நேர்த்தி கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.   நேற்று காலை 9.30 மணிக்கு உளுந்துார்பேட்டை பஸ் நிலையம் அருகே உள்ள நல்லதம்பி குளக்கரையில் இருந்து புறப்பட்ட  ஊர்வலம் முக்கி வீதிகள் வழியாக கோவிலை சென்றடைந்தது.  பின்னர், சுப்ரமணியர் சுவாமிக்கு பால் அபிஷேகம் நடந்தது.  பேரூராட்சி  தலைவர் ஜெய்சங்கர், துணை தலைவர் தாண்டவராயன் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

அவலுார்பேட்டை: அவலுார்பேட்டை சித்தகிரி முருகன் கோவிலில் பங்குனி உத்திரவிழா  நடந்தது. நேற்று காலை மூலவர் அபி ேஷக ஆராதனை, சக்திவேல் காவடி அபிேஷகம், அர்ச்சனை மகா தீபாராதனை நடந்தது. காலை 10:00 மணிக்கு மலை  அடிவாரத்திலிருந்து பக்தர்கள் முதுகில் கொக்கி அணிந்து புஷ்பரத தேர், டிராக்டர், மாட்டு வண்டி மற்றும் கல் உருளைகளை இழுத்து  ஊர்வலமாக சென்று நேர்த்தி கடனை நிறைவேற்றினர். மதியம் ஆன்மிக சொற்பொழிவும், மாலையில் சுவாமி திருக்கல்யாண  நிகழ்ச்சியும் நடந்தன. விழா குழு தலைவர் அண்ணாமலை, ஊராட்சி தலைவர் கலாராஜவேலாயுதம், குழு உறுப்பினர்கள் ராமலிங்கம்,  வெங்கடேசன், ஏழுமலை, சத்யா ஆறுமுகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !