தீவனூர் கோவிலில் பிரம்மோற்சவ விழா
ADDED :3527 days ago
புதுச்சேரி: தீவனுார் பொய்யாமொழி விநாயகர் கோவில் பிரம்மோற்சவ விழா, ஏப்ரல் 12ம் தேதி துவங்குகிறது. திண்டிவனம் அடுத்த தீவனுாரில், பிரசித்திப்பெற்ற பொய்யாமொழி விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இங்கு பிரம்மோற்சவ விழா, ஏப்ரல் 12ம் தேதியன்று, கணபதி ஹோமம் மற்றும் கொடியேற்றத்துடன் துவங்குகிறது.அடுத்த நாள் 13ம் தேதி முதல், 17ம் தேதி வரை, காலையில் சிறப்பு அபிஷேகம், இரவு, சுவாமி, மாட வீதி உலா நடக்கிறது. 18ம் தேதி, 1008 பால்குட அபிஷேகம் நடக்கிறது.வரும் 19ம் தேதி, இரவு 10:00 மணிக்கு, பொய்யாமொழி விநாயகருக்கு திருப்பூணுால் கல்யாணம், 20ம் தேதி காலையில், தேர்த் திருவிழா, 21ம் தேதி மாலையில், தீர்த்தவாரி, 22ம் தேதி, முத்துப்பல்லக்கில் சுவாமி வீதி உலா நடக்கிறது